நாகை மாவட்டத்தில் 23,619 நபர்களுக்கு ரூ.125 கோடி பயிர்கடன்

நாகை, நவ.13: நாகை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 619 நபர்களுக்கு ரூ.125 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் செயல்படும் 122 கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் 23 ஆயிரத்து 619 நபர்களுக்கு ரூ.125 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த அக்டோபர் மாதம் வரை மகளிர் சுய உதவிக் குழுக்கடனாக ரூ.68.37 லட்சமும், நகைக் கடனாக ரூ.4058.40 லட்சமும் கடன் வழங்கப்பட்டுள்ளது. பண்ணை சாரா கடனாக ரூ.240.46 லட்சமும், மகளிர் தொழில் முனைவோருக்கான கடனாக ரூ.13.30 லட்சமும், பணிபுரியும் மகளிருக்கான கடனாக ரூ.78.17 லட்சமும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்து 788 விவசாயிகளின் கடன் தொகை ரூ.130.73 கோடி மற்றும் வட்டி ரூ.13.69 கோடி என மொத்தம் ரூ.144.42 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: