கருவாட்டாறு கால்வாய் பாசன விவசாயிகளுக்கு நீர்வளத்திட்டம்

திருச்சி, நவ.13: கருவாட்டாறு கால்வாய் பாசன விவசாயிகள் நீர்வளத்திட்டத்தில்சேர்ந்து பயனடைய சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வேளாண்பல்கலைக்கழகத்தின கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள கருவாட்டாற்றில் (கரைபொட்டனார்) கால்வாய்பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர்வளத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் கோவையில் உள்ள நீர்நுட்பமையம் செயல்படுத்தப் படவுள்ளது. இத்திட்டத்தில் நெல்வயல்களில் வயல்நீர் குழாய்கள் அமைத்தல், பயறு வகைப்பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்தல், நஞ்சில்லாத பயிர்சாகுபடி கிராமங்களைஉ ருவாக்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்தல்ஆகிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. செயல்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து விதை, உயிர்உரங்கள், நுண்ணூட்டச்சத்து உரங்கள், பயிர்வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் மற்றும் இடுபொருட்களான விதை, உயிர்உரங்கள், நீரில் கரையும் உரங்கள் மற்றும் சொட்டு நீர்பாசன உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. எனவே கருவாட்டாறு (கரைபொட்டனார்) கால்வாய்பாசன பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0431 - 2614417, 9944198709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: