8 பேரை கொன்ற யானை

பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரிபாளையம் மற்றும் பருத்தியூர் கிராமம் அருகே கடந்த சில மாதமாக ெதாடர்ந்து அட்டகாசம் செய்து வரும், ஒற்றை காட்டு யானை. கடந்த 2017ம் ஆண்டு துவக்கத்தில், கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அட்டகாசம் செய்ததுடன் அங்கே 4 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த யானையை, அதே ஆண்டு மே மாதத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப்பை அடுத்த வரைகளியாறு அடர்ந்த வனத்தில் விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து டிசம்பர் மாதத்தில் வெளியேறிய யானை சேத்துமடையில் உள்ள தோட்டத்தில் புகுந்து, அங்கு ஒரு தொழிலாளியை தாக்கி கொன்றதுடன், பலரை விரட்டி தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதையடுத்து யானையை கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு வாரமாக அப்பணி நடைபெற்றது.

ஆனால் அந்த யானை, அந்நேரத்தில் கேரள வனப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த ஆண்டில் கடந்த மே மாதத்தில், நவமலையில் ஒரு  முதியவர் மற்றும் ஒரு சிறுமியையும், சில நாட்களுக்கு முன்பு விவசாயி ஒருவரையும் தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இப்படி கடந்த 3 ஆண்டுகளில் வெவ்வேறு இடங்களில் இதுவரை மொத்தம் 8 பேரை இந்த யானை தாக்கி கொன்றதுடன். 10க்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுள்ளது. இந்த யானையை விட்டால், இன்னும் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், அட்டகாச கொடூர யானையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: