மாவட்ட அளவிலான கராத்தே போட்டி  சாய் கராத்தே கிளப் அணி சாம்பியன்

ஊட்டி, நவ. 13: மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 340 புள்ளிகள் பெற்று குன்னூர்  சாய் கராத்தே கிளப் அணி முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நீலகிரி மாவட்ட கராத்தே டூ சங்கம் சார்பாக 23ம் ஆண்டு மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி மற்றும் மாநில கராத்தே போட்டிக்கான தேர்வு குன்னூர் சிஎஸ்ஐ., வெஸ்லி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 340 புள்ளிகள் பெற்று குன்னூர் ராஜேந்திரன் தலைமையிலான ஸ்ரீ சாய் கராத்தே கிளப் அணி முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை 295 புள்ளிகள் பெற்று திலிப்குமார் தலைமையிலான பிளாக் நிஞ்சா கராத்தே அணி பிடித்தது. 225 புள்ளிகள் பெற்று ஜோசப் பாக்கிய செல்வம் தலைமையிலான எவரெஸ்ட் கராத்தே கிளப் அணி மூன்றாம் இடம் பிடித்தது. நான்காம் இடத்தை ஊட்டி கருணாகரன் தலைமையிலான கோஷிகான் கராத்தே கிளப் அணி பிடித்தது. இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில், குன்னூர் சிஎஸ்ஐ., வெஸ்லி ஆலய ஆயர் ராபின்சன் பிரபாகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மேலும், அகில இந்திய கராத்தே சங்க விளையாட்டு ஆணைய இயக்குநர் சென்சாய் பால்விக்ரம் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வழங்கினார். போட்டியின் நடுவர்களாக கோவையை சேர்ந்த செவின், மணி, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன், திலிப்குமார், ஜான், குமார், சுப்ரமணி, வீரபாண்டி, உதயகுமார், நித்யா, ரீனா ரேச்சல், நவீன் ஹரிஸ் ஆகிேயார் பணியாற்றினர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டியில் நீலகிரி மாவட்டம் சார்பில் பங்கேற்கின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ஜோசப் பாக்கியசெல்வம், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: