நாகர்கோவிலில் ஆக்ரமிப்பு பகுதியில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்ட மரங்கள் துளிர்த்தன

நாகர்கோவில், நவ.13: நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தை எதிரே  திரையரங்கம் ஆக்ரமிப்பு செய்த பகுதி மாநகராட்சியால் கடும் சட்ட போராட்டத்திற்கு பின்னர்  மீட்கப்பட்டது. இப்பகுதியில் தற்போது சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக இப்பகுதியில் நின்ற 10க்கும் மேற்பட்ட மரங்கள் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாரின் உத்தரவுப்படி, புளியடியில் உள்ள மாநகராட்சி நவீன தகனமேடை அமைந்துள்ள அமைதி பூங்காவிற்கு வேருடன் பிடுங்கி மாற்றப்பட்டது.  தற்ேபாது இந்த மரங்கள் புதிய இடத்தில் வேர் பதித்து, துளிர் விடத் தொடங்கி உள்ளன. இதுபோல் சாலை ஆக்ரமிப்பில் அகற்றப்படும்  மரங்களை வேருடன் வேறு இடத்திற்கு மாற்றி வளர்க்கவும், தனியார்களும்,  இதுபோல் கட்டுமான பணிகளின் போது, மரங்களை வெட்டுவதற்கு பதிலாக வேருடன் இடம் மாற்ற இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: