மக்கள் குறைகேட்பு முகாமில் வீடுகட்டும் திட்டத்தில் பணி ஆணை

பள்ளிப்பட்டு,நவ.13: ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு  ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி ஆகிய அலுவலங்களில் நடைபெற்ற  மக்கள் குறை கேட்பு முகாம்களில்  பொதுமக்கள் வழங்கிய மனுக்களைப் ஜெகத்ரட்சகன்

எம்.பி பெற்றுக்கொண்டார்.பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில்    பிரதமந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு   பணி ஆணை வழங்கினார்.    திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, மாவட்ட துணை செயலாளர்  திருத்தணி சந்திரன், மாவட்ட பொருளாளர் சத்தியராஜ், பொதுக்குழு உறுப்பினர் மா.ரகு, ஒன்றிய செயலாளர்கள்  ஜி.ரவீந்திரா, ஆர்த்தி  ரவி, பழனி, சண்முகம்,  பேரூர் செயலாளர் டி.ஆர்.கே.ரவி, ஜோதி குமார், நெசவாளரணி துணை தலைவர் நாகலிங்கம், இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார்  உட்பட அனைத்து துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

திருத்தணி: திருத்தணி நகராட்சி அலுவலகத்தில்  பொதுமக்களிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஏராளமானவர்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, குடிநீர்  சாலை வசதி ஆகியவை கேட்டு மனு கொடுத்தனர். அப்போது அவருடன் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கார்த்திகேயன்,  சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி, நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன்,  நகர செயலாளர்  எம்.பூபதி, ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அகூர் மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories: