மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் திட்டம் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்

கந்தர்வகோட்டை, நவ.12: கந்தா–்வகோட்டை தாலுகா பழைய கந்தர்வகோட்டை கிராமத்தில் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான விழிப்புணா–்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் சங்கரலட்சுமி தலைமையில் நடைபெற்றது.அப்போது சென்னை வேளாண்மை துறை இயக்குனர் விவசாயிகளுக்கு நேரடியாக எழுதிய கடிதம் விவசாயிகளான கலியபெருமாள், முருகன், புண்ணியமூர்த்தி, தம்பிதுரை மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சென்னை வேளாண்மை இயக்குநர் நேரடி கடிதத்தில் விவசாயிகள் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் மூலம் உரச்செலவினை குறைத்து மண்வளத்தினை பாதுகாத்து அதிக மகசூல் எடுக்க இயலும் என்பதால் விவசாயிகள் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரங்கள் இடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதில் குழுமியிருந்த விவசாயிகளுக்கு வேளாண்மை அலுவலர் ஜெயவேலனால் வாசித்து காட்டப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநர் சங்கரலட்சுமி பேசுகையில், ஒட்டுமொத்த பரப்பில் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் திட்டத்தின் கீழ் பழைய கந்தா–்வகோட்டை கிராமம் தோ்வு செய்யப்பட்டு அனைத்து விவசாயிகள் வயல்களிலும் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்வள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் செயல்விளக்க விவசாயிகளுக்கு நுண்சத்துகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக துணை வேளாண்மை அலுவலா் சவடமுத்து வரவேற்று பேசினார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வன் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.

Related Stories: