வியாபாரிகள் சங்கம் சார்பில் கறம்பக்குடி குமரகுளக்கரையில் பனை விதை நடும் பணி தீவிரம்

கறம்பக்குடி, நவ.12: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் கறம்பக்குடி திருமணஞ்சேரி செல்லும் சாலை அருகே உள்ள பாசன குளமாக உள்ள குமரக்குளம் கரையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் பனை விதை நடும் பணி துவங்கியது.பருவகால மாற்றங்களில் இருந்து இயற்கை சூழலை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கறம்பக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் குமரக் குளம் கரையில் பனை விதைகள் மற்றும் பனை விதை பந்துகளை நட்டனர். இந்த பனை விதை நடும் நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர் சாந்தியமூர்த்தி தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் எவரெஸ்ட் சுரேஷ் மற்றும் சங்க முன்னாள் பொருளாளர் வேல்முருகன் காந்தி, வியாபாரிகள் சங்க பொருளாளர் வேல்முருகன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த அப்துல் கரீம், வெள்ளை சாமி, பகர்தீன், நமசிவாயம், தர்மலிங்கம், அருள் இருதயராஜ், பால்சாமி, ஆனந்தன், முனியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வியாபாரிகள் சங்க செயலாளர் வெண்ணிலா ஐயப்பன் செய்திருந்தார்.

Related Stories: