அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு தேசிய அளவிலான கண்காட்சிக்கு தேர்வு

புதுக்கோட்டை, நவ.12: வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவன் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெய்யை சுத்தப்படுத்த மாதிரி கப்பல் கண்டுபிடிப்பு. இது மாநில அளவில் நடந்த போட்டியில் முதல்பரிசு பெற்று, தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டிக்கு தேர்வாகி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் செந்தில்அரசு(13) என்பவர் அப்பள்ளி அறிவியல் ஆசிரியர் சந்திரபோஸ் வழிகாட்டுதல் படி, கடலில் மிதக்கும் கச்சாஎண்ணெய்யை கடலில் இருந்து எடுக்க புதியதாக ஒரு கருவி கண்டுபிடிக்க திட்டமிட்டு அதன்படி, கப்பல் மூலம் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை எடுக்க கருவி உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் கரூரில் நடந்த 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில், செந்தில்அரசு கண்டுபிடித்த கப்பல் முதல் பரிசு பெற்றது. மேலும், தேசிய அளவில் நடைபெறவுள்ள கண்காட்சிக்கு தேர்வாகி உள்ளது. இதற்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் மாணவன் செந்தில்அரசை பாராட்டினர்.

Related Stories: