சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.28.81 லட்சம் நஷ்டஈடு

திருவில்லிபுத்தூர், அக்.18: விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு ரூ.28.81 லட்சம் நஷ்டஈடு வழங்க திருவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சடையாண்டி மனைவி பரமேஸ்வரி(34). இவர் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் கடந்த 2010ல் வேனில் ராஜபாளையம் அருகிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். திருவில்லிபுத்தூர்   கிருஷ்ணன்கோவில் அருகே வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மீது வேன் மோதியது. இதில் படுகாயமடைந்த பரமேஸ்வரி, உறவினர் ஆண்டிபட்டியை சேர்ந்த பொன்னையா(52) உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து திருவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சரண்,  பரமேஸ்வரியின்  குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 200 நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டார். மேலும் இந்த தொகையை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்தார். பொன்னையாவின் குடும்பத்தினருக்கு ரூ.13 லட்சத்து 55 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். அந்தத் தொகையையும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: