தேனி தீபாவளி பஜாரில் மிளகாய் பஜ்ஜி கடைகளுக்கு மவுசு

தேனி, அக். 19: தேனியில் தீபாவளி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிதாக மிளகாய் பஜ்ஜி கடைகள் அதிகம் முளைத்துள்ளன. இதனால் உழவர்சந்தையில் குடைமிளகாய் விற்பனை அதிகரித்துள்ளது.தேனியில் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளிகள், பட்டாசு, நகைகள் உள்ளிட்ட இதர பொருட்கள் வாங்க, பொதுமக்கள் பஜார் பகுதிக்கு வரத்தொடங்கி உள்ளன. இவர்களைக் கவரும் வகையில் மிளகாய் பஜ்ஜி கடைகள் திடீரென ரோட்டோரங்களில் முளைத்துள்ளன. இதனால் தேனி உழவர்சந்தையில் குடை மிளகாய் வியாபாரம் களைகட்டி உள்ளது. புத்தாடை எடுக்க வருபவர்களுக்கு மிளகாய் பஜ்ஜி சுவையில் வரிசைகட்டி நிற்கின்றனர்.இதுகுறித்து உழவர்சந்தை வியாபாரிகள் கூறியதாவது: தேனி உழவர்சந்தையில் ஓசூர் பகுதிகளில் இருந்து காரம் இல்லாத குடைமிளகாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனை சிறு வியாபாரிகள் அதிகம் விரும்பி வாங்கி இதில் பஜ்ஜி செய்து விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த வியாபாரம் தான் தற்போது கனஜோராக நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: