தேனி என்.எஸ்.இன்ஜி.கல்லூரிக்கு தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரி விருது

தேனி, அக். 18: தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருதினை தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது.உலக இளைஞர் பேரவை சார்பில் 2019ம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது தேர்வு சென்னையில் நடந்தது. இதில் 520 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளான்று சென்னையில் நடந்த விழாவில் தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருதினை சென்னை டிவிஎஸ் நிறுவன உபதலைவர் ரவிச்சந்திரன், அண்ணாபல்கலைக்கழகத்தின் சிஈடி இயக்குநர் ரவிக்குமார், உலக இளைஞர் பேரவை தலைவர் அன்பரசன், அருள் வழங்கினர். விருதினை தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் ஆகியோர் பெற்றனர்.மேலும், உலக இளைஞர் பேரவை சார்பில் தமிழக அளவில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான புராஜக்ட் எக்ஸ்போ மதுரையில் நடத்தப்பட்டது. இதில் டாக்டர். அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருதிற்கு 76 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.

இதில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள் குருசர்வேஷ், சந்தோஷ்பாண்டி, சின்னத்துரை, மோகன்ராம் ஆகியோரின் படைப்புகளான சிம்பிள் மெட்டல் பெண்டர், எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேசன் துறை மாணவியர் பிரவீனா, ரீனா, சக்திலெட்சுமி ஆகியோரின் படைப்புகளான எலக்ட்ரிக் லயன்மேன் சேப்டி யூசிங் போல்ட் ஐஓடியும், கட்டிடவியல் துறை மாணவர்கள் பரத்குமார், ஜான்மைக்கேல், அப்துல்ரசீத், விஜயகுமார் ஆகியோரின் படைப்புகளான செல்ப்டிரைபாடு, கணிப்பொறி அறிவியல் துறை மாணவியர் மோனிஷா, திவ்யா, ஹேமலதா, வைஷ்ணவி ஆகியோரின் படைப்புகளான என்சம்மபிள் லேனிங் ஆள் இம்பேலன்ஸ் டேட்டா ஆகிய நான்கு படைப்புகள்தேர்வு செய்யப்பட்டன.சிறந்த படைப்புகளை சமர்ப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் இளம் சாதனையாளர்கள் விருதும், இக்கல்லூரியின் பேராசியர் ஆதிலிங்கத்திற்கு டாக்டர்.அப்துல்கலாம் சிறந்த பேராசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது.விருதினை பெற்றவர்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன், உபதலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: