ஊக்கத்தொகை வழங்கிட கோரிக்கை

புதுச்சேரி, அக். 18:   புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலத்தில் இஐடி பாரி நிர்வாகம் கரும்பு ஒரு டன்னுக்கு அரை கிலோ சர்க்கரையை மானிய விலையில் வழங்குவது வழக்கம். கடந்தாண்டு ரூ.26க்கு ஒரு கிலோ சர்க்கரை நிர்வாகம் வழங்கியது. ஆனால் இந்தாண்டு கிலோவுக்கு ரூ.2ஐ உயர்த்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக விலை ரூ.28 ஆக ஏற்றியுள்ளது.

2013-14ம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கும் இஐஓ பாரி நிர்வாகத்திற்கு கரும்புக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டிய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 2017ம் ஆண்டு முதல் ரு.200 வழங்கி வருகிறது. ஆலை நிர்வாகம், விவசாயிகளும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கரும்பிற்கான ஊக்கத்தொகையினை புதுச்சேரி விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்காத நிர்வாகம், விவசாயிகளுக்கு வழங்கும் சர்க்கரை விலையினை மட்டும் தன்னிச்சையாக உயர்த்தும் போக்கினை கண்டிக்கிறோம். மேலும், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகையினை புதுச்சேரி கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு வழங்கிய விலையிலேயே தீபாவளிக்கு சர்க்கரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: