ஒன்றிய அலுவலகம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

முஷ்ணம், அக். 18: முஷ்ணத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள இடத்தை காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் பார்வையிட்டு தரை தளங்களை தூய்மை செய்து, கணினி மற்றும் தளவாட பொருட்கள் ஆகியவற்றை சரி செய்யும் பணி மேற்கொண்டனர். முஷ்ணம் ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள் உள்ளன.இதனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன், அதற்கான ஆயத்த பணிகளில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.கடலூர் நீதிமன்றம் உத்தரவுவிபத்தில் என்எல்சி ஊழியர் பலி: ₹75 லட்சம் இழப்பீடு

கடலூர், அக். 18: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன் செந்தமிழ்ச்செல்வன். என்எல்சியில் முதுநிலை தொழில்நுட்ப ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நெய்வேலி பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது மனைவி சித்ரா மற்றும் மகன்கள், கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர்.இதை தொடர்ந்து கடலூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மனுவை விசாரித்த மக்கள் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீரநாத்ராவ், விபத்தில் இறந்த என்எல்சி ஊழியர் செந்தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.75,45,585 வழங்க உத்தரவிட்டார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்தியா ஆகியோர் ஆஜராகினர்.

Related Stories: