புதுவையில் இடைத்தேர்தல் கடலூர் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

கடலூர், அக். 18: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மாநில காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் வரும் 21ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி 19ம் தேதி(நாளை) மாலை 6 மணிமுதல் தேர்தல் நாளான 21ம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 24ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மேற்படி தினத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் 19ம் தேதி மாலை 6 மணிமுதல் தேர்தல் நாளான 21ம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 24ம் தேதி எல்லா மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், எப்.எல்.3, பார் உரிமையாளர்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: