நீடாமங்கலம் பிருந்தாவன்நகரில் சாலையில் கழிவுநீர் செல்வதால் வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீடாமங்கலம், செப்.18: நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் உள்ள பிருந்தாவன் நகர் தெருவாசிகள் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் தஞ்சை சாலை தனியார் மில் அருகில் உள்ள பிருந்தாவன் நகர் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாலையில் கழிவுநீர் சென்று சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் இத்தெருவில் மின் விளக்குகள் எரிவதில்லை. தனியார் ஆக்கிரமித்துள்ள இடங்களை அகற்ற வேண்டும். தெருவில் தினசரி துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும். பல இங்களில் கழிவு நீரால் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது என தினந்தோறும் நாளிதழ்களில் செய்தி வருகிறது. எனவே நீடாமங்கலம் பிருந்தாவன்நகர் கிராமத்தில் சாலையில் செல்லும் கழிவு நீரால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே நோய் பரவும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: