நாகை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு

நாகை,அக்.18: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகை மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜூ கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் மாநாட்டை தொடங்கி வைத்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, இளங்கோ, ரேணுகா, பாலாம்மாள், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சசிகலா நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் துர்க்காம்பிகா நன்றி கூறினார்.

Related Stories: