வியாபாரிகள் எதிர்பார்ப்பு புதிய குகை வழிப்பாதையில் மழை நீர் தேக்கம் சேறு சகதியானதால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர்: கரூர் பெரியகுளத்துப்பாளையம் புதிய குகைவழிப்பாதையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் வாகனஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். கரூரில் இருந்து பெரிய குளத்துப்பாளையம் பகுதிக்கு ரயில்வே பாதையை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டனர். வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கரூரில் இருந்து எளிதில் போக்குவரத்து நடைபறும் நோக்கில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேறி இருக்கிறது. சமீபத்தில் திறப்புவிழா கண்ட இந்த குகை வழிப் பாதையில் மழைநீர் புகுந்து விடுகிறது.

வயல்வெளியில் ரயில்வே பாதையின் அடியில் அமைக்கப்பட்டுள்ள குகை வழிப்பாதையில் மழைநீருடன் சேறும் சகதியுமாக தேங்கி கிடக்கிறது. நீர் வற்றினாலும் சகதி காய்ந்து மணலாகி புழுதி பறக்கிறது. சிறிய மழைக்கே மழைநீர் தேங்கி விடுகிறது. மழைநீர் வடியும் வகையில் குகை வழிப்பாதையில் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தி வடிவமைத்து கட்டியிருக்கவேண்டும். மழைநீர் மீண்டும் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வாகன ஓட்டிகளின் அவதியை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: