பழங்குடியின மக்கள் வாழ்க்கை குறித்து வலைத்தளத்தில் தவறான பதிவேற்றம்

ஊட்டி, அக்.17: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் அடையாள குட்டன், மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் பழங்குடியின குலகோயில் தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் அமைந்துள்ளது.

இந்த ேகாயிலுக்குள் எங்களது பூசாரியை தவிர வேறு யாரும் செல்வதில்லை. நாங்களும் இதுவரை சென்றதில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் ேததி சுற்றுலா வழிகாட்டிகள் மூலமாக பிரவீன்மோகன் என்பவர் எங்களது முத்தநாடு மந்திற்கு வந்துள்ளார். யாருடைய அனுமதியின்றியும் எங்களது குல கோயிலுக்குள் சென்று வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி யூ டியூபில், ‘சீக்ரெட் ஆப் டெம்பிள் தோடாஸ். வாட் இஸ் இன்சைடு’ என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இச்சம்பவம் தோடர் இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களது பெண்கள் பல ஆண்களுடன் வாழ்க்கை நடத்துவதாகவும், திருமணத்திற்கு முன்னரே உறவு வைத்துக் கொள்வதாகவும் எங்களது பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த வீடியா பதிவில்.இதனால், தோடர் இன மக்கள் மற்றும் பெண்கள் மன வேதனையடைந்துள்ளனர். தோடர் இன மக்களை பறறி கேவலமாக சித்தரித்து வீடியோ பதிவு ஏற்றம் செய்து வலைதளத்தில் வெளியிட்டவர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மேலும், சுற்றுலா வழிகாட்டிகள் யாரும் எங்களது இடத்திற்கு இனி யாரையும் அழைத்து வரக் கூடாது. சுற்றுலா வருபர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை என்பதையும் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: