தீபாவளி பண்டிகையையொட்டி மருத்துவமனை அருகே பட்டாசு வெடிக்க கூடாது மாணவர்கள், மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்

பெரம்பலூர், அக். 17: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே தீபாவளி பட்டாசுகளை வெடிக்க்கூடாது என்று மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் விநியோகம் செய்தனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசுகளை ஆபத்தின்றி மிகவும் பாதுகாப்பாக வெடிக்க தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரங்களை துண்டு பிரங்களை விநியோகித்து மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தீயணைப்புத்துறையின் பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலர் தாமோதரன் உத்தரவின்பேரில் குன்னம் தாலுகாவில் உள்ள வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் நிலைய அலுவலர் (பொ) பழனிச்சாமி தலைமையில் தீயணைப்புத்துறை வீரர்கள் பால்ராஜ், அங்கமுத்து, கவியரசன், கார்த்திகேயன், வரதராஜ் ஆகியோர் வேப்பூர் பஸ்ஸ்டாண்ட், கடைவீதி பகுதிகளிலும், வேப்பூர், நன்னை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும் நேரடியாக சென்று விபத்தின்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான ஆலோசனை தெரிவித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பஸ் பயணிகளிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

அதில் பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. பெரியவர்கள் இல்லாத நிலையில் சிறுவர்கள் தன்னிச்சையாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க கூடாது. குட்டையான வத்திகளை மற்றும் தீக்குச்சிகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க கூடாது. குறிப்பாக பட்டாசுகளை பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் வெடிக்க கூடாது. வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. சட்டை பைகளில் ஆபத்தான பட்டாசுகளை வைத்திருக்க கூடாது. குடிசைகள் நிறைந்த, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கூரை வீடுகள் நிறைந்த பகுதியில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசுகளை கண்ணாடி பாட்டிலில் மற்றும் டின் பாட்டிலில் வைத்து வெடிக்க செய்யக்கூடாது. பட்டாசால் ஏற்படும் தீக்காயத்துக்கு இங்க், வாழைச்சாறு, கிரீஸ், எண்ணெய் போன்ற எவ்விதமான திரவங்களையும் பயன்படுத்த கூடாது. ஈரமான பட்டாசுகளை எரிவாயு அடுப்பு மற்றும் விறகு அடுப்பு அருகில் வைத்து உலர வைக்க கூடாது. பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்க செய்யக்கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. அரசு நிர்ணயம் செய்த நேரத்துக்கு பிறகு பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று துண்டு பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: