நிலத்தடி நீர் மேலாண்மை கருத்தரங்கம்

ராஜபாளையம், அக். 17: ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில்,  மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம், நீர்வளம் நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் கீழ் இயங்கும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில், நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த பயிற்சி கருத்தங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நிலத்தடி நீர் தாங்கிகளின் தகவல்கள் மற்றும் பயனீட்டாளர்களின் நீர் மேலாண்மை குறித்த மூன்றாம் நிலை புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை அனைவருக்கும் அதிகாரிகள் வழங்கினர்.பின்னர் மத்திய நிலத்தடிநீர் வாரிய நீரியல் விஞ்ஞானிகள், வேளாண்மை பொறியியல்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் நிலத்தடிநீர் மேலாண்மை, மண் அரிப்பு, நீர் சேமிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மேலும், நீரியல் விஞ்ஞானிகள் புரொஜக்டர் மூலம், பட விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Related Stories: