குடிநீர் வழங்கக் கோரி ஆணையரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கமுதி, அக்.17:  கமுதி அருகே ஒத்தப்புளி கிராமத்தில் பல மாதங்களாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படாததால். கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை முற்றுகையிட்டனர். கமுதி அருகே முஷ்டகுறிச்சி ஊராட்சி ஒத்தப்புளி கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக 4 கி.மீ தொலைவில் உள்ள நல்லாங்குளம் என்ற ஊரில் குடிதண்ணீர் எடுத்து வருகின்றனர். சில மாதங்களாக அங்கும் தண்ணீர்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒத்தப்புளி கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் பல மாதங்களாக வரவில்லை. மேலும் மின் மோட்டாரும் பழுதடைந்துள்ளது. எனவே கிராம மக்கள் கமுதி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமாரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சில நாட்களில் சரி செய்து விடுகிறேன் என்று உறுதியளித்த பின்பு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: