கீழக்கரையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கீழக்கரை, அக்.17:  கீழக்கரை பியர்ல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் திருப்புல்லாணி வட்டார வள மையம் சார்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலமாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களிடையே முழுமையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பயிற்சி 5 நாட்களாக வழங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 149 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி துவக்க விழா தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, கல்லூரி முதல்வர் சுமையா, சுரோஷ், ரவி, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் தர்மகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் அன்வர் ஜஹான் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள் பயிற்றுனர்கள் உலகராஜ், ஈஸ்வரவேலு, சந்தனக்குமார், ஜலிலா பர்வின், பஞ்சநாதன், ஜெகநாதன் ஆகியோர் கருத்தாளராக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் முருகேஸ்வரி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: