நாமக்கல் பிஜிபி கல்லூரியில் மாணவர்களுக்கு மலர் அலங்கார பயிற்சி

பரமத்திவேலூர், அக். 17: நாமக்கல் பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹோட்டல் மானேஜ்மென்ட் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஒருநாள் மலர் அலங்கார பயிற்சி மற்றும் கண்காட்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் மகேஷ் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் விஜய கணேஷ் வரவேறார். பிஜிபி கல்வி குழுமங்களின் துணைத்தலைவரும், சென்னை ஹோட்டல் லீ ராயல் மெரிடியன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான விசாலாட்சி பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.தாளாளர் கணபதி மலர் அலங்கார பயிற்சியின் முக்கியத்துவம், நோக்கம், பயன்பாடு ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார். கல்வி பிரிவு முதன்மையர் டாக்டர் பெரியசாமி  வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். உதவி பேராசிரியர் லீனா கார்த்திகேயன் நன்றி கூறினார். பயிற்சி வகுப்பில் சேலத்தை சேர்ந்த பிரபல மலர் அலங்கார நிபுணர் செல்வம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். இதில் பிஜிபி கல்வி குழுமத்தை சார்ந்த பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: