மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, அக். 17:     மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத  நடவடிக்கைகளை கண்டித்தும், மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்  லெனினிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில்  கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஐ மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை  தாங்கினார். சிபிஎம், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிபிஐ (எம்எல்)  அரசியல் தலைமை உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் ஆனந்தன்,  மாவட்ட துணை செயலாளர் சவுரிராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ரிசர்வ்  வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மக்கள் நல  பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம்  ரூ.18 ஆயிரம் என உத்தரவாதம் செய்ய வேண்டும். வேலையிழந்த  தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு ஸ்டாலின்மணி, மாவட்ட துணை செயலாளர் ராமசாமி, மாவட்ட  நிர்வாக குழு அப்பாவு, கள்ளக்குறிச்சி வட்ட செயலாளர் மணி, மாவட்டக் கமிட்டி  உறுப்பினர் செண்பகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: