தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிரடி பறிமுதல்

காட்டுமன்னார்கோவில், அக். 17:  சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு நேற்று காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன் தலைமையில் அலுவலர்கள் நல்லதம்பி, சின்னமுத்து, ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், அன்பழகன், மாரிமுத்து ஆகியோரின் தணிக்கை குழுவினர் நடத்திய சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலை குட்கா பொருட்கள், 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட செயற்கை வண்ணங்கள் கலந்து விற்பனைக்கு வைத்திருந்த குளிர்பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு, பாதுகாப்பான உணவு பற்றியும், பாதுகாப்பற்ற உணவுகளை தவிப்பது பற்றியும் அதிகாரிகள் வழங்கிய கருத்துகளை கேட்டு பயன் பெற்றனர். சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் நடத்திய சோதனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Related Stories: