பெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் காவலாளி இல்லாததால் குடிமகன்களின் கூடாரமான அரசு உயர்நிலைப் பள்ளி

பெரும்புதூர், அக். 17 காவலாளி இல்லாததால், அரசு உயர்நிலைப்பள்ளி குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது.பெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு கொளத்தூர், மேட்டு கொளத்தூர், இரும்பேடு, நாவலூர், வெள்ளாரை உள்பட பல கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்றனர்.1969ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக துவங்கப்பட்ட இப்பள்ளிக்கு, ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டது. படிப்படியாக தரம் உயர்த்தபட்டு தற்போது உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பள்ளிக்கு காவலாளி இல்லாததல், இரவு நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொளத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் அதே பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து, அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகம் சுழிக்கின்றனர்.குடிமகன்கள் சாப்பிடும் உணவு பொருட்களையும், ஆங்காங்கே வீசுகின்றனர்.சிலர் வாந்தி எடுத்து அறுவறுக்கத்தக்க செயல்களை செய்துவிடுகின்றனர். காலையில் பள்ளிக்கு செல்லும், மாணவர்கள் அதை சுத்தம் செய்யும் அவலநிலை உள்ளது. இதனை தடுக்க போலீசில் புகார் செய்தாலும், இரவு நேரங்களில் இங்கு ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், எங்களது பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, பள்ளிக்கு இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும். பள்ளியின் அருகில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்றனர்.

Related Stories: