பள்ளி, கல்லூரிகளில் இளைஞர் எழுச்சி நாள் விழா

காரைக்குடி, அக்.16:  காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சர்வதேச பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சத்யன் தலைமை வகித்தார்.  நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். துணை தலைவர் அருண் முன்னிலை வகித்தார். ஸ்ரீ ராஜ வித்யவிகாஸ் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்வி குழும தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். பொருளாளர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தார். காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் நடந்த நிகழ்ச்சியில்  மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சேதுராமன் தலைமை வகித்தார்.  நிர்வாக இயக்குநர்கள் ரஜனிரத்னமாலா,  அஜய்யுக்தேஷ்,  ஐஸ்வர்யாஅஜய்யுக்தேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  காரைக்குடி, புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளி, கலை அறிவியல் கல்லூரியில்  நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பள்ளி குழு தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமதுமீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முதல்வர் ஹேமலதாசுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். காரைக்குடி ரகவேந்திரா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். காரைக்குடி அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடந்த விழாவிற்கு  பள்ளி முதல்வர் அனில்குமார் வரவேற்றார். பள்ளி தாளாளர் காளிச்சரண் தலைமை வகித்தார்.  காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா வரவேற்றார். தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமிசத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் சார்பில் அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் என் வாழ்வில் திருக்குறள் என்ற நூல் 162 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர்கள் கோமதி, முத்துவேல்ராஜன், உமா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.  

காரைக்குடி அருகே சாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அன்பரசுபிரபாகர் தலைமை வகித்தார். ஆசிரியர் ரம்யா நன்றி கூறினார். காரைக்குடி அருகே விவேகானந்தா பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரியில் நடந்த விழாவிற்கு  கல்லூரி தாளாளர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.  பாலிடெக்னிக் முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.  காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவராமமூர்த்தி வரவேற்றார். கல்லூரி தாளாளர் சையது தலைமை வகித்தார். காரைக்குடி எஸ்.ஆர் கேட்டரிங் கல்லூரி, நர்சிங், ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் தொழில்பயிற்சி கல்லூரி, ராஜாஸ் ஹெரால்ட் நர்சரி  பள்ளியில் நடந்த விழாவிற்கு கல்விகுழும தாளாளர் அட்வகேட் அப்துல்சித்திக் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.   காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியின் என்எஸ்எஸ் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் என்எஸ்எஸ் அலுவலர் ஜெயமணி வரவேற்றார்.  கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர் கதிரவன் பேசினார். பொறியாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி கவிதா நர்சிங் ஹோம் ஆரஞ்சு ட்ரி நர்சிங் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிதா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ் தலைமை வகித்தார். டாக்டர் கவிதா முன்னிலை வகித்தார்.  

Related Stories: