அனுமதி பெற்ற வழித்தடத்தில் பேருந்துகளை இயக்காமல் நடுவழியில் இறக்கிவிடும் அவலம்

கோவை, அக். 16:  கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து (மையம்) அலுவலகத்தில் நுகர்வோர் அமைப்புகள் உடனான காலாண்டு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், குமாரவேல், சரவணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு கூறியதாவது:

அனுமதி பெற்ற வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்காமல் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்படுகின்றனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. சித்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷேர் ஆட்டோக்களில் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு போதையில் ஆட்டோ ஓட்டுவது அதிகரித்து வருகிறது. போக்குவரத்து சிக்னல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படவில்லை என புகார் தெரிவித்தார். இதற்கு பதலளித்து பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இந்த புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: