நோய் பரவும் அபாயம் நிலக்கோட்டை அருகே

வத்தலக்குண்டு, அக். 16: தேவேந்திர குல வேளாளர் ஆணை வெளியிட கோரி நிலக்கோட்டை அருகே 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலின் போது ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என தமிழக அரசு அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தன. ஆனால் இதுவரை தமிழக அரசு ஆணை வெளியிடவில்லை.இதை கண்டித்து நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் கருப்புக்கொடி ஏற்றி இடைத்தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி நிலக்கோட்டை பகுதிகளான இந்திராநகர், உச்சினம்பட்டி, கல்லடிபட்டி, நூத்துலாபுரம், குரும்பபட்டி, சிறுநாயக்கன்பட்டி, கொங்கர்குளம், மேட்டுப்பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்திற்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: