மாவட்டம் மழை பொழிய முகாம் கொடைக்கானலில் பரபரப்பு விரைவில் பருவமழை துவக்கம் குடிநீரை காய்ச்சி குடியுங்க

திண்டுக்கல், அக். 16: பருவமழை காலம் விரைவில் துவங்கவுள்ளதால் தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது விரைவில் பருவமழை துவங்க உள்ளது. இதன் அறிகுறியாக அடிக்கடி பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவில் குளிர்ந்த காற்றே அடித்து வருகிறது. அவ்வப்போது லேசான மழைத்தூறலும் போடுகிறது. இந்த காலநிலை கொசுக்கள் உற்பத்திக்கு ஏற்றதாகும். இதனால் பலவித தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நகர் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மழை காலத்தில் டெங்கு, மலேரியா, சளி, இருமல், மஞ்சள்காமாலை உள்ளிட்ட நோய்கள் அதிகளவில் பரவும். சாலைகளில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட குடிநீரை நன்கு காய்ச்சி பயன்படுத்தவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘சீதோஷ்ணநிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. குறிப்பாக மழைக்கால ஆரம்ப காலங்களில் கொசு, தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்தவேண்டும். கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்களும், குடிநீரால் சளி, இருமல், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது. கொசு உற்பத்தியை தடுக்க ஒவ்வொரு குடிமகனின் பங்கும் உள்ளது. தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் காற்று புகாதவாறு மூடி பாதுகாக்க வேண்டும். மருந்துகள் மூலம் கொசுக்களை அழிக்க வேண்டும். குடிநீரை குளோரினேசன் செய்வது, நன்கு காய்ச்சி பயன்படுத்துவது மூலமாகவும் நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்’ என்றனர்.

டாக்டர்கள் அட்வைஸ்

Related Stories: