நாமக்கல்லில் அதிகமாக பருவ மழை பெய்யும்

நாமக்கல், அக். 16: வடகிழக்கு பருவ மழை நாமக்கல்லில், அதிகமாக பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:அடுத்த 3 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் பொதுவாக நல்ல மேகமூட்டத்துடனும், மழையுடனும் காணப்படும்.தென் மேற்கு பருவமழைக்காலம் முடியும் தருவாயிலும், வடகிழக்கு பருவ மழை துவங்கும் தருவாயிலும் வானிலை உள்ளது.நாளை வட கிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான அறிகுறிகளாக கிழக்கில் இருந்து காற்று வீசத் துவங்கியுள்ளது.பரவலான மழை பகலிலும் காணப்படுகிறது.இதனால் பகல் வெப்பம் குறைந்தும், காற்றின் ஈரப்பதம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நாமக்கல்லிலும், தமிழகத்திலும் நல்ல அளவில் இருக்கும். இயல்பான அளவை விட 20 சதவீதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.இதை நல்ல முறையில் விவசாயம் மற்றும் கால்நடைகளின் உற்பத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: