ஜாகீர்வெங்கடாபுரம் அரசுபள்ளியில் சர்வதேச கை கழுவும் தினம் கடைபிடிப்பு

கிருஷ்ணகிரி, அக்.16: கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உலக கை கழுவும் தினமாக கடைபிடிக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கை கழுவும் நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால் தலைமை வகித்து, கை கழுவுவதன் அவசியம் குறித்தும், சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். அறிவியல் ஆசிரியர்கள் சங்கர், வெண்ணிலா ஆகியோர் கை கழுவும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். முன்னதாக சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். ஆசிரியை மரியஆனந்தி நன்றி கூறினார்.

Related Stories: