கெலவரப்பள்ளி அணைக்கு 408 கனஅடியாக நீர்வரத்து சரிவு

ஓசூர், அக்.16: கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், விநாடிக்கு 408 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தின் நந்திமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு 1,368 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்தது. நேற்று முன்தினம், விநாடிக்கு 568 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 408 கனஅடியாக குறைந்தது. கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவு 44.28 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக உள்ளது. இதனால், அணைக்கு வரும் 408 கனஅடி நீரும், அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

Related Stories: