பழையசீவரம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

வாலாஜாபாத், அக். 16: பழையசீவரம் ஊராட்சியில், பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரம் ஊராட்சி பெரிய காலனியில் வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா தலைமையில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

மழை காலங்களில் வீடுகளின் சுற்றியுள்ள பகுதிகளை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவேண்டும். வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் பழைய டயர்கள், தேங்காய் மட்டை, பிளாஸ்டிக் பாத்திரங்கள், ஆட்டுக்கல் உள்ளிட்ட பொருட்களில் மழைநீர் தேங்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ கலைச்செல்வன், வட்டார சுகாதார  மேற்பார்வையாளர் பாலாஜி, டாக்டர்கள் தனசேகரன், அன்வர், ஆதித்யா, சுகாதார ஆய்வாளர்கள் தீனதயாளன், திருநாவுக்கரசு, தணிகைராஜ் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: