புதையல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி மிரட்டல் நாகர்கோவில் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் அதிரடி கைது பெண் இன்ஸ்பெக்டர், 2 போலீசாரும் சிக்குகிறார்கள்

கருங்கல், அக்.16 : கருங்கல் அருகே புதையல் விவகாரத்தில், வாலிபரை கடத்தி மிரட்டிய வழக்கில் ஆசிரியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின் படி பெண்  இன்ஸ்பெக்டர், 2 போலீசாரும் சிக்குவார்கள் என தெரிகிறது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின்  (26). இவர் ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஜேசிபி டிரைவராக இருந்தார். கடந்த ஒரு வருட காலத்தில் திடீரென இவரிடம் பணப்புழக்கம் அதிகரித்தது. வீடு கட்டியதுடன், சொந்தமாக கார்களையும் ஜெர்லின்  வாங்கினார். ஜேசிபி தோண்ட சென்ற இடத்தில் தங்க புதையல் கிடைத்ததே, ஜெர்லின் வளர்ச்சிக்கு காரணம் என அந்த பகுதியில் வதந்தி பரவியது. இந்த நிலையில் கடந்த வாரம், மான்கறி வாங்கி தருவதாக கூறி ஜெர்லினை ஒரு கும்பல் காரில் கடத்தியது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கும்மளம்பாடு என்ற இடத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்று, ஜெர்லினை மிரட்டி வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர். மேலும் அவரின் இரு கார்கள், 5 பவுன் செயின், இரண்டரை பவுன் காப்பு ஆகியவற்றையும் பறித்துள்ளனர். பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த ஜெர்லின் , தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயராஜன், கருங்கல் கப்பியறை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற ெஜய ஸ்டாலின், கடமலைக்குன்று பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் பகுதியை சேர்ந்த ராஜ அருள்சிங், அவரது சகோதரர் ராஜா அஸ்வின் மற்றும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையை சேர்ந்த ஜெயன் ராபி, கிருஷ்ணகுமார் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது கடத்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் கருங்கல் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சுரேஷ்குமார், ஜெயன் ராபி, கிருஷ்ண

குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் சுரேஷ்குமார், நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 3 பேரிடமும் ஏ.எஸ்.பி.கார்த்திக் விசாரணை நடத்தினார். இதில் கைதான 3 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :ஜேசிபி டிரைவராக இருந்த ஜெர்லினும், இந்த வழக்கில் 2 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெய ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். ஜெய ஸ்டாலின் ரவுடி பட்டியலில் உள்ளார். அவருக்கும், ஆசிரியர் சுரேஷ்குமாருக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் ஜெய ஸ்டாலினுடன், ஜெர்லின் போதையில் பேசிக் கொண்டு இருந்த போது, தனது முதலாளி மூலம் பணம் கிடைத்த தகவலை கூறி உள்ளார். அந்த பணத்தை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவித்துள்ளார். எனவே ஜெர்லின் ராஜீடம் அதிக பணம் உள்ளது என்பதை தெரிந்து கொண்ட ஜெய ஸ்டாலின் இது குறித்து, ஆசிரியர் சுரேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். எனவே ஜெர்லின் ராஜை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று மான் கறி வாங்கி தருவதாக ஜெர்லினை கடத்தி, வள்ளியூர் அருகே உள்ள சுரேஷ்குமாரின் பண்ணை வீட்டுக்கு ெகாண்டு சென்று மிரட்டி சரமாரியாக தாக்கி பணம், நகைகள் மற்றும் கார்களை பறித்துள்ளனர்.

 பின்னர் நாகர்கோவில் அழைத்து வந்து, சுரேஷ்குமாரின் யோசனைப்படி கருங்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களும் தனது பங்கிற்கு, ஜெர்லினை மிரட்டி அவரை வீட்டுக்கு  அழைத்து சென்றுள்ளனர். ஜெர்லின் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அந்த கேமராவில் காட்சிகள் பதிவாகி இருக்கும் என்பதால் பின்னர் வீடு புகுந்து கேமரா ரிசிவரை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் எல்லாம் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தெரிந்து இருக்கிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ெஜயராஜனும், போலீஸ் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் தலைமறைவாக உள்ளார். 2 வது குற்றவாளியாக ஜெய ஸ்டாலினும் தலைமறைவாக உள்ளார். இவர்கள் இருவரையும் தேடி வருகிறோம். இவர்கள் இருவரையும் பிடித்தால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றனர். தற்போது கைதானவர்கள் அளித்துள்ள வாக்கு மூலத்தின் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசாரையும் மீண்டும் விசாரணை வளையத்துக்குள் போலீசார் ெகாண்டு வந்துள்ளனர். எனவே அவர்களும் இந்த வழக்கில் சிக்கலாம் என காவல்துறை  உயர் அதிகாரி கூறி உள்ளார்.

Related Stories: