மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை

கோவில்பட்டி, அக். 15: மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தடையின்றி வழங்க வேண்டும் என கோவில்பட்டியில் நடந்த சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெபஸ்டின்ராஜ் தலைமை  வகித்தார். மாநில

தலைவர் ஜான்சி ராணி, மாநில செயலாளர் முத்துக்காந்தாரி  பேசினர்.

 கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள்  உரிமைகளுக்கான சட்டத்தை (2016) அமல்படுத்த வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பராமரிப்புத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள்  வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையின்றி வேலை வழங்க வேண்டும். சம்பள பாக்கியை உடனடியாக வழங்க  வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். புதிய ரயில் பெட்டிகள்  வழங்கப்பட்டுள்ள அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியை  இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: