உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஓசூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஓசூர், செப்.20: ஓசூர் உழவர் சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய உழவர் சந்தைகளில் ஓசூர் உழவர் சந்தையும் ஒன்றாகும். இந்த சந்தையின் முன் பழக்கடைகள், கீரை கடைகள், காய்கறி கடைகள், தள்ளுவண்டிகள், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்த கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் இந்த கடைகள் இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தது.

காலை வேளையில் அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில்,  ஓசூர் கோட்டாட்சியர் குமரேசன், ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கடைகள் பொக்லைன் கொண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஓசூர் டிஎஸ்பி மீனாட்சி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னறிவிப்பின்றி, நோட்டீஸ் எதுவும் வழங் காமல் திடீரென கடைகளை அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என கூறி நடைபாதை வியாபாரிகள் ஏராளமானோர் ரோட் டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சிறிது நேரம் கண்ட கோஷங்களை எழுப்பிய அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: