ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

ஜெயங்கொண்டம், செப்.19: ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லு£ரியில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டசத்து கண்காட்சி மற்றும் ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மாடர்ன் கல்லூரி துணைத்தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார். அங்கன்வாடி பணியாளர்களால் அமைக்கப்பட்டிருந்த பழவகைகள், கீரைவகைகள், சிறுதானிய வகைகள், பழங்கால சத்தான உணவுகளான கேழ்வரகு அடை, கேழ்வரகு பக்கோடா, கொழுக்கட்டை, கம்பு புட்டு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை காட்சிக்காக வைத்திருந்தனர். அதனை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் செய்திருந்தார். முகாமின் இறுதியில் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மோகன் நன்றி கூறினார்.

Related Stories: