கோவிலூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

அரியலூர்,செப்.19: கோவிலூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், இல்லையெனில் மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு ௯ட்டம் நடைபெற்றது. ௯ட்டத்துக்கு கிளை செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆகியோர் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினர். இக்கூட்டத்தில் வரும் 26-ல் தா.பழூரில் நடைபெறும் மகளிர் அணி மாவட்ட மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது. திருமானூரில் விவசாய சங்க மாவட்ட மாநாட்டை நடத்துவது. இளைஞர் மன்றம், மாணவர் பெருமன்றம் அமைப்பது. கோவிலூர் கிராமத்தில் மக்களுக்காக அடிப்படை வசதிகளை உடனடியாக அரசு செய்து தர வேண்டும். இல்லையெனில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: