எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்புக் குழு கூட்டம்

திருவள்ளூர், செப். 19: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட உதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்த சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள், இச்சட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்கள், அமைப்புகளின் பங்கு மற்றும் பணியின் செயல்பாடுகள் குறித்தும், மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் செயல்படுத்துதல் குறித்தும் குழுவில் விவாதிக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் மேற்படி சட்டபிரிவின் கீழ் பதியப்படும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்காத நிலுவையிலுள்ள வழக்குகள் மீது தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், நிலுவையிலுள்ள வழக்குகளுக்கான சாதி சான்றுகளை விரைந்து வழங்க வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கும், வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையினருக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், எஸ்.பி., அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: