4 மலைக்கிராம மக்கள் அவதி மழையில்லாததால் அவரை விளைச்சல் கடும் பாதிப்பு

உத்தமபாளையம், செப்.17: க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி பகுதிகளில் மழையில்லாததால் அவரை  விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை உள்ளிட்ட மலையடிவாரத்தை ஒட்டி உள்ள இடங்களில் மானாவாரி அவரை விதைக்கப்படுவது வழக்கம். இந்த வருடம் போதிய அளவில் மழையில்லை. விவசாயிகள் மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரை பயிர்களை விதைத்தனர். மலையடிவாரத்தை ஒட்டி உள்ள இடங்களில் அதிக அளவில் பயிர்கள் விளைந்து வந்தன.ஆனால், எதிர்பார்த்த மழை இல்லாத நிலையில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இங்கு விளையக்கூடிய அவரை மதுரை, தேனி மார்க்கெட்களுக்கு செல்லும். இந்த வருடம் பயிரிடப்பட்டவை பெருமளவில் கருகியதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் உள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், `` மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் அவரை விதைப்பது வழக்கம். வருடந்தோறும் மிக அதிக அளவில் விளையக்கூடிய பயிர்கள் விளைந்தபின்பு மார்க்கெட்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த வருடமும் மழை ஏமாற்றியதால் விவசாயிகள் பெரிய அளவில் ஏமாந்துள்ளனர்’’ என்றனர்.

Related Stories: