கத்தியை காட்டி வழிப்பறி: இருவர் கைது

மானாமதுரை, செப்.17: தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரை கன்னார் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் பிரதீப்பாண்டியன் (19). இவர் பூவந்தியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பளம் வாங்கிவிட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அப்போது கன்னார் தெருவை சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (25), வேளார் தெருவை சேர்ந்த அடைக்கலம் மகன் சரத்குமார் (19), ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பிரதீப்பாண்டியனிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்து தப்பியோடினர். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் ராம்குமார், சரத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

நெல்லுக்கு மாற்றாக

சிறுதானியம் பயிரிடலாம்

வேளாண் அதிகாரிகள் ஆேலாசனை

சிங்கம்புணரி, செப். 17: நெல்லுக்கு மாற்றாக சிறு தானியம் சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்தது. இதனால் நீர் பற்றாக்குறையால் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. விவசாயிகள் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நெல் பயிருக்கு மாற்றாக சிறுதனிய பயிர்களான கேழ்வரகு, சாமை, குதிரை வாலி, கம்பு, மற்றும் பயறு வகைகளான உளுந்து, துவரை போன்ற தானியங்களை பயிரிட முன்வர வேண்டுமென வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் செல்வி கூறுகையில், ‘சிறு தானிய பயிர்கள் மிதமான தட்பவெட்ப நிலையிலும், சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். இவைகளுக்கு நீராதாரம், விதை அளவு, உரச்செலவு குறைந்த அளவிலே செலவாகும், ஆனால் அதிக மகசூல் லாபம் பெற முடியும். எனவே விவசாயிகள் அதிக பரப்பில் சிறு தானிய பயிர்களை பயிரிட முன்வர வேண்டும்’ என தெரிவித்தார்.

Related Stories: