அதிகாரிகள் மெத்தனத்தால் கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு

சாயல்குடி, செப்.17:  முதுகுளத்தூர், கடலாடி தாலுகா கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடைமுறைக்கு பிறகும் மீண்டும் புழக்கத்தில் வந்து விட்டது. இதனால் அதிகாரிகள் ஆய்வுகளை தீவிர படுத்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு ஜன.1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கடைகளில் பயன்பாட்டிலுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வருவாய்துறை, உள்ளாட்சி துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். முதலில் ஒரு வாரக்காலம் மட்டும் விறுவிறுப்பாக நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தற்போது கிடப்பில் போடப்பட்டது. இதனால் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, சிக்கல் போன்ற நகர பகுதிகளில் உள்ள தின்பண்டம், உணவு பொருட்கள் கடைகள், பூக்கடை உள்ளிட்ட அதிகமாக அன்றாடம் விற்பனையாகும் பொருட்களை விற்கும் கடைகளில் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வழங்கி வருகின்

றனர். நகர் பகுதியில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட கப்புகள், பிளாஸ்டிக் இலைகளை கடைக்காரர்கள் பயன்படுத்தி வருவதால், மீண்டும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் மறுப்பு பொருட்களை கேட்டால், பிளாஸ்டிக் பொருட்களை திணிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: