பதக்கம் பெற பதட்டம் வேண்டாம் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பேச்சு

வத்தலக்குண்டு, செப். 17:  வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியில் தென் மண்டல அளவிலான சிபிஎஸ்இ பெண்கள் பள்ளிகளிடையே கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது. மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் நடத்திய இப்போட்டியில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, பழநி, கம்பம் உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து 21 அணிகள் பங்கேற்றன. இரண்டு நாட்கள் போட்டிகள் நடந்தன. முதல்நாள் போட்டியை பழநி எம்எல்ஏவும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐபி.செந்தில்குமார் துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் போட்டியை ஆத்தூர் எம்எல்ஏவும் கழக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி துவங்கி வைத்தார்.  14 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணி பிரிவில் விருதுநகர் பிஎஸ் சிதம்பர நாடார் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருநெல்வேலி புஷ்பலதா வித்ய மந்திர் பள்ளி முதலிடம் பிடித்தது. பரிசளிப்பு விழாவிகற்கு பள்ளி தலைவர் தங்கமுத்து தலைமை வகிக்க, தாளாளர் கயல்விழி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். பரிசுகள் வழங்கி ஐ.பெரியசாமி பேசுகையில், ‘நான் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய போது 2 பல்கலைக்கழகவீரர்களை வைத்து கொண்டு 5 பல்கலைக்கழக வீரர்களை கொண்ட அணியை வெற்றி

பெற்றோம். பதக்கம் பெற வேண்டுமானால் பதட்டம் இல்லாமல் விளையாட வேண்டும்’ என்றார். இதில் முன்னாள் இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன், முன்னாள் இந்திய கூடைப்பந்தாட்ட வீரர் காசிராஜன், திமுக நிர்வாகிகள் ரெக்ஸ், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ரியா நன்றி கூறினார்.

Related Stories: