கொடைக்கானல் பூண்டியில் கஜா இழப்பீடு இதுவரை இல்லை கலெக்டரிடம் குமுறல்

திண்டுக்கல், செப். 17:  கொடைக்கானல் பூண்டியில் கஜா புயலில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லையென அப்பகுதி பெண்கள் கலெக்டரிடம் குமுறலுடன் மனு அளித்தனர்.

கொடைக்கானல் தாலுகா, பூண்டி கிராமத்தில் உள்ளது எம்ஜிஆர் காலனி. இப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதில் கடந்த கஜா புயலின்போது 22 வீடுகள் சேதமடைந்தன. இதற்கு எவ்வித நிதியுதவியும் இதுவரை வழங்கவில்லை. அதேபோல் இங்குள்ள கழிவுநீரை சுத்தம் செய்து பல நாட்களாகி விட்டது.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர குடிநீர், தெருவிளக்கு வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் இலவச பட்டாவுக்கு பல ஆண்டுகளாக கோரியும் வழங்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Related Stories: