திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை

திருச்சி, செப்.17: திருச்சியில் தொடர்ந்து மாலை நேரத்தில் மழைபெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். திருச்சி மாநகர் முழுவதும் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் அடிப்பதும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயில் அடித்தது. தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான தூறல் விழுந்தது. அதனைத்தொடர்ந்து சுமார் 25 நிமிடங்களுக்கு ஓரளவு பலத்த மழை பெய்தது.

பின்னர் மழை பெய்து கொண்டே இருந்தது. திருச்சி மாநகரம், ரங்கம், மேல சிந்தாமணி, சத்திரம் பேருந்து நிலையம், மாா்க்கெட், அாியமங்கலம், செந்தண்ணீா–்புரம், துரைச்சாமிபுரம், பாலக்கரை, மேலபுதூா், மத்திய பேருந்து நிலையம், கருமண்டபம், கிராப்பட்டி, டிவிஎஸ் டோல்கேட், கல்லுக்குழி, ராம்ஜி நகா், தீரன்நகர், பிராட்டியூர், உறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள பள்ளமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. தெருக்களிலும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியதால் நடந்து செல்பவர்களும், இரு சக்கர வாகனம் மற்றும் வாகனங்களில் செல்பவர்களும் அவதிக்குள்ளாகினர். வேலைக்கு சென்ற பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடை எடுத்து வராததால் மனையில் நனைந்து கொண்டே சென்றனர்.

Related Stories: