இந்தியாவில் 27 மில்லியன் டன் பயறு உற்பத்தி வேளாண் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் தகவல்

திருச்சி, செப்.17: இறக்குமதி ெசய்த நிலைமாறியது இந்தியாவில் 27 மில்லியன் டன் பயறு உற்பத்தி வேளாண் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாழ்வாதார பாதுகாப்பிற்கான காலநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண்மை சவால்களும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் 2 நாட்கள் நடந்தது. வேளாண் கல்லூரி முதல்வர் மாசிலாமணி தலைமை வகித்தார். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் முன்னிலை வகித்தார். இதில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் அழகுசுந்தரம் விழாவினை துவக்கி வைத்து பேசியதாவது:  இந்திய விவசாயிகள் ெபரும்பான்மையினர் சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தபோதிலும் 285 மில்லியன் டன் உணவு உற்பத்தி, 350 மில்லியன் டன் தோட்டக்கலை உற்பத்தி, 180 மில்லியன் டன் பால் உற்பத்தி, 100 மில்லியன் டன் முட்டை உற்பத்தி மற்றும் 11 மில்லியன் டன் தேங்காய் உற்பத்தி ெசய்ததன் மூலம் நமது நாட்டை தன்னிறைவு ெபற வைத்தது மிகப்ெபறும் ெசயல்.

அகில இந்திய அளவில் பயறுகள் பற்றாக்குறையால் இறக்குமதி ெசய்த நிலைமாறி 27 மில்லியன் டன் உற்பத்தி ெசய்து பயறு உற்பத்தியில் தன்னிறைவு ெபற்ற நாடாக இந்தியா மாறி உள்ளது. இந்த முயற்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் மற்றும் மாநில வேளாண் பல்கலைக் கழகங்களின் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பங்களிப்பு பாராட்டத்தக்கது. ஆனால், கரிம வெளியீடு, மீத்தேன் வாயு, மழை அளவில் ஏற்படும் மாற்றங்கள், அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளப்ெபருக்கு இவற்றால் ஏற்படும் சவால்களை சமாளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களை கண்டறிந்து ெசயல்படுத்தினால்தான் விவசாயிகள் வெற்றி ெபற முடியும். இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் 151 கிராமங்களில் தேசிய கால நிலைக்கேற்ற வேளாண்மைக்கான புதுமைத் தொழில்நுட்பங்கள் (NICRA) என்ற திட்டம் ெசயல்படுத்தப்பட்டு காலநிலை மாறிவரும் சமயங்களிலும் வேளாண் உற்பத்தி மற்றும் வருமானம் இரண்டுமே அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஒரிசா மாநிலத்திலும் இதே திட்டம் ெசயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த கருத்தரங்கில் நாடெங்கிலும் இருந்து 650அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். அவையாவும் நவீன வேளாண்மை, நவீன தோட்டக்கலை, நவீன இயற்கை வள உபயோகம், விதை-விதை இயந்திரமயமாக்கல், வேளாண் விற்பனை மற்றும் மதிப்புவுட்டுதல் என்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. வேளாண் ஆராய்ச்சியில் புகழ்ெபற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து கருத்தரங்கில் ெபறப்பட்ட ஆய்வுச்சுருக்க புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தரும் அதற்கான குறுந்தகட்டை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் உமா கருத்தரங்கு மலரை தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆகியோர் வெளியிட்டனர். இதில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் சுப்பிரமணியன், கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பீட்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக ெமட்ராஸ் வேளாண் மாணவ கூட்டமைப்பின் ெசயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பழத்துறை தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.

Related Stories: