இந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர், செப். 17: பாஜ தலைவர் அமித்ஷா இந்தியாவை ஒற்றுமைபடுத்துவதற்கு இந்தி மொழியால் தான் முடியும். இந்தி மொழியை பிரதான மொழியாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இதனை கண்டித்து நேற்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 100க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “பாஜ ஆட்சியில் தேசத்துக்கு விரோதமான சட்டங்களை உருவாக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தி திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும். ஒரே ரேஷன் கார்டு. ஒரே நாடு. ஒரே மொழி என்று பாஜவினர் கூறிவருவது இந்தியா வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். உடனே மத்திய அரசு இந்தி திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.  

Related Stories: