முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

ராசிபுரம், செப்.17:ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் நானோ தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்க்கு முத்தாயம்மாள் எஜூகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசனின் தாளாளர் கந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இணைச் செயலாளர் ராகுல் முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில், வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் லேதஆன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர் ஆராய்ச்சியாளர்களிடத்தில் கலந்துரையாடினார். மேலும், மாணவர்களிடத்தில் நானோ தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர் தினேஷ்பாபு, நானோ தொழில்நுட்பத்தின் பொதுவான பயன்பாடுகள் குறித்து பேசினார். மேலும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன் மேம்பட ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன், நானோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆராய்ச்சி குறித்து பேசினார். இக்கருத்தரங்கில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் டீன் கோபி, துறைத்தலைவர் சரவணக்குமார், ஜோதிராமலிங்கம் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: